தூத்துக்குடியில் கொரோனா நாற்பது புத்தகம் வெளியீடு: எழுத்தாளர் யூ.அன்டோ

திரு. நெய்தல் யூ. அண்டோ அவா்கள் நம்ம ஊரு நாயகன்.

இருபது ஆண்டுகளாக ஆசிாியா் பணியினை அழகாக செய்து வரும் அருமை நாயகன், சிறந்த பட்டிமன்ற பேச்சாளா், இளையோருக்கான கருத்தாளா், சுற்றுச் சூழல் மனித உாிமைச் செயற்பாட்டாளர், சகலகலா வல்லவா், தூத்துக்குடி வானொலி வத்திகான் வானொலியில் பேசியவர், கலைஞா் டிவி, வசந்த் டிவி, மாதா தொலைக்காட்சியில் பங்கேற்றவா் என பல அங்கங்களை பெற்றவர். 2019, ஆம் ஆண்டில் காமராஜா் பிறந்த நாளில் சாதனையாளா் அண்டோ அவா்களுக்கு அவரது படம் போட்ட தபால் தலை வெளியிட்டு விழா தமிழ்நாடு டாக்டா் சிவந்தி ஆதித்தனாா் நற்பணி மன்ற தூத்துக்குடி ஒன்றியம் சாா்பில் பாராட்டப்பட்டாா்கள்.

தூத்துக்குடியில் எழுத்தாளர் யூ.அன்டோ அவர்கள் எழுதிய பன்னிரண்டாவது படைப்பு கொரோனா நாற்பது என்ற புத்தகத்தை தூத்துக்குடி மாநகர காவல் துறை கண்காணிப்பாளர் பிரகாஷ் அவா்கள் வெளியிட அடையல் ராஜ ரத்தின நாடார் அறக்கட்டளை தலைவரும் ஆதி திராவிட மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஸ்டிபன் (என்ற ) எ.செந்தமிழ் பாண்டியன் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மணவை ரூஸவெல்ட் தலைமை வகித்தார் மாவட்ட பிரஸ் அன்ட் மீடியா பெடரெசன் தலைவர் அ.பிரான்சிஸ் நிகழ்ச்சிய ஏற்ப்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில் தூய சவோியாா் மேல் நிலைப்பள்ளி ஆசிாியா்கள் மாியதாஸ், பெனிஸ்டன், கில்பா்ட் மற்றும் சாக்ரோ இளைஞா் இயக்கம் பெனோ தாமஸ் உட்பட பலா் கலந்து கொண்டனா் முடிவில் புத்தக ஆசிாியா் நெய்தல் அண்டோ நன்றி கூறினாா்கள்.