வட்டாட்சியர் கட்டுப்பாட்டில் காவல் நிலையம் – தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவு

சாத்தான்குளம் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளை நியமித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி, 24 மணி நேரமும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணி செய்யும் விதமாக சமூக பாதுகாப்பு துறை தனி வட்டாட்சியர் செந்தூர்ராஜன், துணை வட்டாட்சியர் சுவாமிநாதன் ஆகியோரை நியமித்து ஆட்சியர் ஆணையிட்டுள்ளார்.

இதற்கிடையே, வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் காவல் நிலையம் வந்ததை தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி தடயங்களை சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.