கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் : மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி  மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில்  இன்று செய்தியாளர்களை  சந்தித்த  ஆட்சியர் சந்தீப் நந்துரி  கூறுகையில் :

தூத்துக்குடி  மாவட்டத்தில் கொரோனா  பரிசோதனை ஆய்வகத்தின்  மூலம்  3731  நபர்களின் மாதிரிகள்  பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 27  நபர்கள் கொரோனா  தொற்று  நோயினால் பாதிக்கப்பட்டார்கள். 26 நபர்கள் ஏற்கனவே  நலம்  பெற்று  வீடு திரும்பி உள்ளார்கள். ஒரு  நபர்  சிகிச்சை  பலன்  இன்றி உயிர் இழந்துள்ளார். தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில்  கொரோனா  தொற்று நோய்  இல்லாத  மாவட்டமாக மாறியுள்ளது. தூத்துக்குடி  மாவட்டத்தில் 10 தனிமைப் படுத்தப்பட்ட  பகுதிகள் உள்ளது.  இதில்  செய்துங்கநல்லூர், காயல்பட்டணம்,  கேம்பலாபாத்  ஆகிய 3 பகுதிகள்  (01. 05. 2020) முதல் அப்பகுதியில்  உள்ள  தடைகளை படிப்படியாக  குறைக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரானா தொற்று இனி பரவாமல் தடுப்பதற்காக மாவட்ட எல்லைகள் அனைத்தும் தீவிர கண்காணிப்பில் உள்ளன. எனவே

  • அடுத்த  மாநிலம்  மற்றும்  அடுத்த மாவட்டத்தில்  இருந்து  முன்  அனுமதி பெறாமல்  பயணிகளை  அழைத்து வரும்  “வாகனங்கள்  பறிமுதல் செய்யப்படும்”.
  • வெளி மாவட்டத்தில்  இருந்து  வரும் நபர்கள்,  மருத்துவ  பரிசோதனை செய்யப்பட்டு  14 “நாட்கள்  தனிமை படுத்திடவும் நடவடிக்கை” எடுக்கபட்டுள்ளது.
  • அனுமதி  பெறாமல் வரும்  வாகனங்கள் பறிமுதல்  செய்யப்படுவதோடு,  சட்டபடி நடவடிக்கை  மேற் கொள்ளப்படும்.  

என தெரிவித்தார்.