தூத்துக்குடியில் கல்லறை கட்டிடம் கட்ட தடை ; தூத்துக்குடி மாநகராட்சி,ஆணையர் ஜெயசீலன் அறிவிப்பு

தூத்துக்குடியில் கல்லறை கட்டிடம் கட்ட தடை ;

மாலை 6 மணிக்கு மேல் இறந்தவர்களின் உடலை எரிக்கவோ புதைக்கவோ கூடாது ;

தூத்துக்குடி மாநகராட்சி,ஆணையர் ஜெயசீலன் அறிவிப்பு

தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான மையவாடி பகுதியில் கல்லறை கட்டிடம் கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மாலை 6 மணிக்கு மேல் இறந்தவர்களின் உடலை எரிக்கவோ புதைக்கவோ கூடாது என மாநகராட்சி ஆனையர் ஜெயசீலன் அறிவித்துள்ளார்

இதுகுறித்து தூத்துக்குடி மாநகராட்சி,ஆணையர் (ம) தனி அலுவலர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலம் பாளை ரோடு மேற்கு பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி மையவாடி பகுதியில் (இடுகாடு மற்றும் சுடுகாடு) தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுச்சட்டம் 1939, 2016-ம் ஆண்டைய திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016-ம் ஆண்டைய பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை விதிகள் 2008-ம் ஆண்டைய தூத்துக்குடி மாநகராட்சி சட்டம் விதிகளின் படி இறந்தவர்களின் உடல்களை புதைத்த பின்னர் தரைதளத்திற்கு மேல் தனியார்கள் கல்லறை கட்டிடம் கட்ட தடை செய்யப்பட்டுள்ளது.

மையவாடி பகுதியின் முன்பகுதியில் அமைந்துள்ள இறப்பு பதிவாளர் அறையில் இறப்பு விவரம் பதிவு செய்ய வேண்டும்.

மாலை 6 மணிக்கு மேல் இறந்தவர்களின் உடலை எரிக்கவோ புதைக்கவோ கூடாது. தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட (பிளாஸ்டிக் போன்ற) எவ்வித பொருட்களையும் மையவாடி பகுதியில் கொண்டு வர அனுமதியில்லை.

மையவாடி பகுதியை மையவாடி வளாகத்தினுள் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்த கூடாது. இவற்றை மீறி செயல்படுவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆணையர் மற்றும் தனி அலுவலர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.