தூத்துக்குடி – பெங்களூரு மீண்டும் விமான சேவையை துவக்கம்

தூத்துக்குடியில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பெங்களூருவிற்கு விமான சேவையை துவக்கியது. சுமார் ஒரு மாத காலம் மட்டுமே அந்த சேவை நீடித்தது. இந்நிலையில் மீண்டும் வரும் தீபாவளி தினத்தன்று (27-ம் தேதி) இன்டிகோ நிறுவனம் சார்பில் தூத்துக்குடி-பெங்களூரு இடையே புதிதாக விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த விமானம் காலை 7.50 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் விமானம் 9.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இதுபோல் பெங்களூரில் இருந்து 5.45 மணிக்கு புறப்படும் விமானம் 7.30 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.