தூத்துக்குடி அன்னம்மாள் கல்லூரி சார்பில் சுகாதார பெண் பணியாளர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியின் சார்பில் சுகாதார பெண் பணியாளர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியின் உள் தர உத்திரவாத அமைப்பானது (IQAC) அன்னை பாரத் கேஸ் நிறுவனத்துடன் இணைந்து இன்று ‘சுகாதார பெண் பணியாளர்களை மேம்படுத்துதல்’ நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தியது. இந்நிகழ்ச்சியில் மாநகராட்சியில் பணிபுரியும் 40 சுகாதார பெண் பணியாளர்கள் பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் ஜாய்சிலின் சர்மிளா வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக அன்னை கேஸ் நிறுவனர்  பொன்சிங் கலந்து கொண்டார். 

சமூகத்தில் அங்கீகாரத்தை எதிர்பார்க்காமல் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் சுத்தமான இந்தியாவை உருவாக்கும் உதவியாளர்களை அங்கீகரிக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பேச்சாளர் சந்துரு வேல்முருகன், பெண் சுகாதார பணயாளர்கள், தங்களது பணிகளை செவ்வனே செய்து மாவட்டத்தின் சுகாதாரத்தை பேணிக்காக்கும் பொறுப்பிலிருக்கும் பணியாளர்களை பாராட்டி ஊக்கவுரை நிகழ்த்தினார். தொடர்ந்து பணியாளர்களுக்கு விளையாட்டு போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியை சுதா குமாரி செய்திருந்தார்.