தூத்துக்குடி விமானநிலையத்தில் இன்று முதல் இரவு நேர விமானப்போக்குவரத்து துவக்கம்

தூத்துக்குடி விமான நிலைய வரலாற்றில் ஒரு புதிய மைல் கல்லாக இன்று முதல் இரவு நேர விமானப் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு வந்த இண்டிகோ விமானம் மாலை 6:20மணிக்கு தரை இறங்கியது. பின்னர் இரவு 7 மணிக்கு அதே விமானம் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது. தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து இரவு நேர விமான போக்குவரத்திற்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் இந்திய விமான நிலையங்களின் ஆணையம் அனுமதி அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.