TrueCaller App-ல் தொழில்நுட்பக்கோளாறு.

TrueCaller சமீபத்தில் GooglePay மற்றும் PhonePe போன்ற online பண பரிவர்த்தனை செய்வதற்கான வசதியை அறிமுகப்படுத்தியது அந்த வசதியில் தற்போது தொழில்நுட்ப குறைபாடு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

Truecaller பலருக்கு அவர்களின் அனுமதியின்றி UPI ஐடிகளை உருவாக்கியது. பல பயனர்களுக்கான UPI ஐடியை உருவாக்குவதற்கான பதிவு செயல்முறையை தானாகவே தொடங்கியது. ஒரு Twitter பயனர் @Codepodu , தனது Truecaller பயன்பாடு தனது தொலைபேசியிலிருந்து ஒரு அறியப்படாத எண்ணுக்கு ஒரு Encrypted SMS அனுப்பியதாக விளக்கினார், அதைத் தொடர்ந்து ICICI வங்கி ஒரு SMS அனுப்பியது, “UPI பயன்பாட்டிற்கான உங்கள் பதிவு தொடங்கியது”.என பதிவிட்டுள்ளார்.