டிரெண்டிங்கில் உள்ள #வீதிக்குவாங்க_ரஜினி#;ஹேஷ்டாக்

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் குடியுரிமையை வழங்குவது குறித்து கடுமையான எதிர்ப்பு தெரிவித்து தமிழகம், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, பழைய வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது நேற்றிரவு போலீசாரால் தடியடி நடத்தப்பட்டதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்பு சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது என்பிஆர் அவசியம், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தான் நான் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும். இதில் இஸ்லாமியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் முதல் ஆளாக நான் எதிர்ப்பேன் என்றார். இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் முதல் ஆளாக நான் எதிர்ப்பேன் என்று ரஜினி கூறியிருந்த நிலையில் தற்போது அவரை கிண்டல் செய்யும் விதமாக சமூகவலைத்தளத்தில் #வீதிக்குவாங்க_ரஜினி என்ற ஹேஷ்டாக் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மற்றும் பல்வேறு மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது.