புதுவித முயற்சி : பொதிகைச் சாரல்

கொரோனா மக்கள் முடக்கத்தால் தெருநாய்கள், காகம் போன்ற பறவைகள் உணவின்றி வாடி வருகின்றன. இவற்றிற்கு மறு வாழ்வு அளிக்க பொதிகைச்சாரல் என்ற அமைப்பு நூதன முயற்சியில் இறங்கியுள்ளது. அதுகுறித்து ஓர் கழுகு பார்வை.

பொதிகைச்சாரல் என்ற அமைப்பை தங்கமதி மற்றும் பூதத்தான் ரமேஷ் என்ற இரு நண்பர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பினர் லாக்டவுன் நாட்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் இருந்து கொண்டே தேவையற்ற பொருட்களை கொண்டு தயாரிக்கும் கலைநயமிக்க பொருட்களை போட்டோ எடுத்து தங்களது மொபைல் (9962086565) எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் அனுப்புமாறு கூறுகின்றனர். அந்த கலைப்பொருட்கள், ஓவியங்கள் போன்றவற்றை பேஸ்புக்கில் உள்ள பொதிகைச்சாரலின் பேஸ்புக்கில் ஏலம் விட திட்டமிட்டுள்ளனர்.

இப்படி திரட்டப்படும் நிதியில் பாதித்தொகை பொருட்களை உருவாக்கியவருக்கும், மீதித்தொகை வாயில்லா ஜீவன்களின் நலன்களுக்கும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து தங்கமதி கூறியதாவது, பொதுமக்கள் உருவாக்கும் கலைபொருட்களுக்கான குறைந்தபட்ச விலையை அவர்களே நிர்ணயித்து கொள்ளலாம்.  25பேர் இணைந்தவுடன் அவை ஒரு குழுவாக உருவாக்குவோம். அவர்களது பொருட்களை பேஸ் புக்கில் உள்ள எங்களது பொதிகைச்சாரல் குழுவில் ஏலம் விடுவோம். ஏலம் விடும் 5 நாட்களுக்கு முன்னர் அதுகுறித்த தகவல்களை அந்த குழுவில் உள்ள அனைவருக்கும் கிராபிக்ஸ கார்டாக அனுப்பி வைப்போம். அதை அவர்களுடைய நண்பர் வட்டாரங்களுக்கு அனுப்பி வைப்பர். நாங்களும் சமூக வலைதளங்களில் புரோமோட் செய்வோம். பின்னர் ஏலம் விடப்படும். 

இதில் 3 வயது முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் ஒரு கேட்டகிரியாகவும், 11 வயது முதல் 18 வயது வரை ஒரு கேட்டகிரியாகவும், 19 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒரு கேட்டகிரியாகவும் கலந்து கொள்ளலாம் என்றார். மேலும், இதில் திரட்டப்படும் நிதியில் வாயில்லா ஜீவன்களின் உணவு, மருத்துவ உதவிகள் போன்றவற்றை செய்ய திட்டமிட்டுள்ளோம். இதில் எங்களை பொறுத்த வரை இரண்டு விஷயங்களை பார்க்கிறோம். ஒன்று வாயில்லா ஜீவன்களுக்கு உதவுவது, மற்றொன்று வீட்டில் இருந்துகொண்டு சுயமாக சம்பாதிக்கலாம் என்ற உத்வேகத்தை அளிப்பது என கூறுகிறார் தங்மதி. இதுகுறித்த மேலும் தகவல் அறிய +919962086565 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்து அறிந்து கொள்ளலாம்.