அப்ப நாம காட்டியும் கொடுக்கிறோம், கூட்டியும் குடுக்குறமா ?பாஸ்!!!

இந்தியாவில் திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் இருவரும் சேர்ந்து வாழ்வது தவறு இல்லை என சில மாதங்களுக்கு முன்னர்  சட்டம் கொண்டு வரப்பட்டது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூரின் முக்கிய பகுதியில் ஆண் மற்றும் பெண் இருவரும் ஒரே அறையில் லிவிங் டுகெதர் என்ற முறையில் தங்கும் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வந்த நிலையில், இதை கலாச்சார சீர்கேடு என கூறி வருமான வரித்துறையினர் மற்றும் காவல்துறையின் நடவடிக்கையால் இழுத்து மூடப்பட்டதால் , அந்த ஹோட்டல் உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆண் மற்றும் பெண் இருவரும் திருமணமாகாமல் ஒரே அறையில் தங்குவது சட்டப்படி எந்தத் தவறும் இல்லை என்று கூறியுள்ளனர். இந்நிலையில் விரைவில் அந்த ஹோட்டல் திறக்கப்பட இருப்பதால் கோவையில் உள்ள காதலர்களின் கூட்டம் தற்போது அலைமோத ஆரம்பித்துள்ளது. இந்த செய்தியினை குறித்து இணையத்தில் பலவிதமாக கிண்டலாக விமர்சித்து வருகின்றனர்.