உலக மகளிர் தினத்தையொட்டி தூத்துக்குடியில் ஆல் கேன் டிரஸ்ட் மற்றும் கொற்கை மகளிர் குழு சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி எட்டயயாபுரம் ரோடு ஏ.பி.சி. மகாலட்சுமி கல்லூரி பின்புறமுள்ள கமாக் பள்ளி சாலையோரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் ஆல் கேன் டிரஸ்ட் தலைவர் மோகன்தாஸ் சாமுவேல், உறுப்பினர்கள் ஐயப்பன், லியோ, செந்தில், மருதபெருமாள், ஜெயராஜ், நாராயணன், கொற்கை மகளிர் குழு தலைவர் காந்திமதி, உறுப்பினர்கள் அழகுலெட்சுமி, ஜெயா, பிரேமா, மஞ்சுளா, சுகன்யா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
