அரசு மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு தனிப்பிரிவு – மதுரை

தேசிய சுகாதாரத்திட்டத்தின் கீழ் 19 லட்சம் ஒதுக்கப்பட்டு ‘ட்ரான்ஸ்ஜென்டர் மல்டி ஸ்பெஷாலிட்டி க்ளினிக்’ என்ற பெயரில் மதுரை அரசு மருத்துமனையில் திருநங்கைகள் சிகிச்சை பெறுவதற்காக, தனிப்பிரிவு இன்னும் சில தினங்களில் திறக்கப்பட உள்ளது. இப்பிரிவு தனி வார்டாக செயல்படும். இங்கு திருநங்கைகள் தயக்கமின்றி, தங்களுக்கு தேவையான சிகிச்சைகளை பெறலாம். மற்றும் திருநங்கைகளுக்கான உடல் நல சிகிச்சைகளுடன், பாலின மாற்று அறுவை சிகிச்சை, மனநல ஆலோசனைகள் உள்ளிட்டவைகளும் வழங்கப்படும் என மதுரை அரசு மருத்துவமனை டீன் சங்குமணி அறிவித்துள்ளார்.