கூத்தாண்டவர் கோயிலுக்கு செல்ல முடியாததால் தூத்துக்குடியில் திருநங்கைகள் சிறப்பு வழிபாடு

ஊரடங்கு காரணமாக கூத்தாண்டவர் கோயிலுக்கு செல்ல முடியாத திருநங்கைகள் தூத்துக்குடியில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

திருநங்கைகள் அனைவரும் முதல்நாள் தாங்கள் கட்டிக்கொண்ட தாலி அறுத்து, தலையில் வைத்த பூவின எடுத்து, வளையகளை உடைத்து பின் வெள்ளைப் புடவை உடுத்தி விதவை கோலம் பூணுகின்றனர். இந்த விழாவிற்காக சித்ரா பெளவுர்ணமிக்கு மூன்று நாட்களுக்கு முன்பே இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து திருநங்கைகள் விழுப்புரத்திற்கு வருகை புரிவார்கள். இந்நிகழ்வு இந்தியாவின் பல பாகங்களில் இருந்து வரும் திருநங்கைளை ஒன்றிணைக்கும் விழாவாக அமைகிறது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் இருந்தாலும் வெளியூர்களுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும் கூத்தாண்டவர் கோயிலில் நிபந்தனைகளுடன் பூஜைகள் மட்டுமே நடந்தது. இதனால் அங்கு செல்ல முடியாத தூத்துக்குடி பகுதி திருநங்கைகள் நேற்று 3 சென்ட் பகுதியில் திருவிழா கோலத்தில் திரண்டனர். அங்கு கூத்தாண்டவர் முக உருவம் வைத்து கும்மியடித்து வழிபட்டனர்.பின்பு தாலி கட்டும் சடங்கிலும், தாலியறுப்பு நிகழ்ச்சியும் நடத்தி ஒப்பாரி வைத்து வழிபட்டனர். பின்னர் வழிபாட்டின் ஒரு பகுதியாக திருநங்கைகளை முக்காடிட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.