ரயிலில் தீ பிடித்து 68 பேர் பலி! பாகிஸ்தானில் பரிதாபம்..

இன்று(31) காலை பாகிஸ்தானில் கராச்சி-ராவல்பிண்டி சென்றுகொண்டிருந்தபோது ரயிலின் ஒரு பெட்டியில் திடீரென தீப்பிடித்தது.

காற்றின் வேகத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீ மிக வேகமாக அருகில் உள்ள பெட்டிகளுக்கும் பரவியது.

தீப்பிடித்த பெட்டிகளில் இருந்த பயணிகள் பலர் உயிர் தப்புவதற்காக அலறியடித்துக்கொண்டு ஓடினர். சிலர் ரயிலில் இருந்து வெளியே பாய்ந்தனர். சிலர் தீயில் சிக்கிக்கொண்டனர்.

நெஞ்சை உருக்கும் இந்த சம்பவத்தில் இதுவரை 68 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.