நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்

தூத்துக்குடி நகர் கோட்டம். நகர் வடக்கு பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட அய்யனார்புரம் துணை மின் நிலையத்தில் இருந்து கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின்னூட்டம் செய்யப்படும் திரேஸ்புரம் உயரழுத்த மின் பாதையில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளயிருப்பதால் நாளை 01.07.2020 புதன்கிழமை ராமர்விளை, நயினார் விளை, முத்துகிருஷ்ணாபுரம், பூபாலராயபுரம் மெயின் ரோடு, கருப்பட்டி சொசைட்டி ரவுண்டானா ஆகிய பகுதிகளில் காலை 10:00 மணி முதல் மாலை 4:00மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று செயற்பொறியாளர்/ விநியோகம்/நகர்/தூத்துக்குடி அவர்கள் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.