ஞானம் – இன்றைய சிந்தனை

ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை சம அளவில் ஏற்றுக்கொள்வதே ஞானம் 

இந்த ஏற்றுக் கொள்ளுதலில் 

இது ‘இவ்வளவுதான் 

இது இப்படித்தான்’ என்று தேறுவதும் 

எல்லாம் ‘இறைவன் விட்ட வழி’ என்று மனதை பக்குவப்படுத்திக் கொள்ளுதலுமே ஞானம் 

இந்த பக்குவபடுதலை நாம் ‘பட்டறி’ மற்றும் ‘கெட்டறி’ என்கிறோம்

அதாவது

‘பட்டறி’ – பட்டால் தான் அறிவு வரும்

‘தனது அனுபவத்தால் அறிதல்’ 

‘கெட்டறி’ – கெட்டால் தான் தெளிவு வரும் 

தவறு செய்தல் மனித இயல்பே 

ஆனால் அதே தவறை மீண்டும் செய்யாதிருத்தல் 

துயரங்கள் நிறைந்த மனதிற்கு ஏதாவது ஒரு நிம்மதி வந்தே தீரும் 

அதனை அறிந்து ஏற்றுக் கொள்ளும் விதமே ‘ஞானம்’ 

இன்ப துன்பங்களின் இருநிலைகள்

முதல்நிலை 

நம்மையறியாமல் வருவது நாம் அறியாமல் தீர்க்கப்படுகிறது 

இதனையே கடவுளின் அருள் என்கிறோம் 

இரண்டாவது நிலை 

நாம் அறிந்து ஏற்படும் துன்பங்களை

நாமே நமது அறிவின் கூர்மையால் தீர்க்கிறோம் 

இதனை நமது அறிவு என்கிறோம் 

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இன்ப துன்பங்கள் சகஜமான போதிலும் உங்கள் ஞானத்தால் அனைத்திற்கும் நல்ல முடிவை கொடுத்திடமுடியும்