இன்றைய சிந்தனை!

நம் மனது!

நல்ல காரியங்களைச் செய்ய ஒரு போதும் பயப்படாதீர்கள்.

தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்.

சாதனைகளுக்கான முதல் படி தீவிரமான ஆழ்ந்த ஆசைதான்.

மனத்தால் நினைக்க முடிந்ததை அடையவும் முடியும்!

இலக்கு என்பது இறுதிக்கெடுவுடன் கூடிய ஒரு கனவு!

ஒவ்வொரு தோல்வியும் அதற்குச் சமமான ஒரு வெற்றியின் விதையை உள்ளடக்கியே வருகிறது.

உங்களால் பெரிய விஷயங்களைச் செய்யமுடியவில்லை என்றால்..

சிறிய விஷயங்களைச் சிறந்த வழியில் செய்து பாருங்கள்.
எதற்காகவும் காத்திருக்க வேண்டாம்.
இந்த நிமிடமே சரியான நேரம்.

விட்டு விலகுகிறவர்கள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை.
வெற்றியாளர்கள் ஒருபோதும் முயற்சியை விட்டு விலகுவதில்லை.
நம்மால் நமது மனதிற்குள் அமைத்துக் கொள்வதே, நம்முடைய ஒரே வரம்பு.

எதை நாம் சரியாக புரிந்துக்கொள்ளவில்லையோ….
அதையே நாம் நம்ப மறுக்கின்றோம்.

விருப்பமே அனைத்து வெற்றிகளுக்குமான முதல் படியாகும்.
உங்களுக்கான மிகப்பெரிய வாய்ப்பானது…..

நீங்கள் இப்பொழுது எங்கிருக்கிறீர்களோ அங்கேயேகூட இருக்கலாம்.

பேசுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்ளுங்கள்.

ஏனென்றால் உங்கள் வார்த்தைகள் மற்றொருவரின் மனதில் வெற்றி அல்லது தோல்விக்கான விதையை விதைக்கக்கூடும்.