இன்றைய சிந்தனை

கொடுப்பது

பரந்த மனப்பான்மை வெற்றியைக் கொண்டுவருகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நம் அனைவரிடமும் அதிகமான பரிசுகள் உள்ளன – ஆற்றல்கள், திறமைகள், அல்லது ஞானம் – இவற்றை நம்மால் முடிந்த அளவு நாம் பயன்படுத்துவதில்லை. நம்முடைய தசைகள் போல – நீண்ட நாள்கள் நாம் அவற்றை பயன்படுத்தாதபோது, அவை வீணாகி விடுகின்றது. ஆதலால், அப்பரிசுகள் நமக்கு வேண்டியபோது, நாம் பயன்படுத்துவதற்கு, அவை எதுவாக இல்லாதிருப்பதை நாம் காணக்கூடும்.

செயல்முறை:

நான் பரந்த மனப்பான்மையோடு என்னுடைய பரிசுகளை மற்றவர்களின் நன்மைக்காக அதிகமாக பயன்படுத்தும்போது, அவை சரியான நேரத்தில் எனக்கு உபயோகமாக இருக்கும். என்னுடைய பரிசுகளை நான் தாராளமாக பயன்படுத்தும்போது, அதன் பலனாக, நான் பெறும் ஆசிர்வாதங்கள் மூலமாக, நான் சுலபமாக முன்னோக்கிச் செல்வதை காண்பேன்.