இன்றைய சிந்தனை – அமைதி

என்னுள் நான் அதிகமாக அமைதியை அனுபவம் செய்யும்போது, என்னுடைய வாழ்க்கையில் அதிகமான நேர்மறைதன்மை நிறைந்திருக்கும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நம்முடைய பலவீனங்கள் ஒவ்வொன்றையும், தனித்தனியாக அறிந்து கொண்டு, அவற்றை வெல்வதற்கு முயற்சி செய்கின்றோம். சிலவற்றை நாம் வெற்றிகொள்ள கூடும், ஆனால், அவை அனைத்தும் நம்முடைய மற்ற பலவீனங்களோடு தொடர்புடையதால், நாம் அதே பிரச்சனைகள் மீண்டும் தோன்றுவதை காண்கின்றோம். அதன்பிறகு, எதிர்மறையானவை நம்மை திணறடிக்க செய்து, நம்முடைய அனைத்து எண்ணங்களையும், சொற்களையும் மற்றும் செயல்களையும் பாதிக்கின்றன.

செயல்முறை:

என்னுடைய உள்ளார்ந்த நேர்மறைதன்மையை பேணுவதற்கு நான் முதலில் என்னுள் உறுதிமொழி எடுத்துக்கொள்வது அவசியம். அதன்பிறகு, என்னுடைய மனதை அமைதியாக வைத்திருப்பதற்கு நான் பயிற்சி செய்வது அவசியமாகும். இந்த அமைதியானது, திருப்தியை கொண்டுவருவதோடு, நேர்மறையான உணர்வுகள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கின்றது. என்னுடைய உள்ளார்ந்த நேர்மறைதன்மையை நான் அதிகமாக பலமாக்கும் போது, என்னுடைய பலவீனங்களை என்னால் சிறப்பாக வெற்றிகொள்ள முடியும்.