இன்றைய சிந்தனை!

கவனம்

சரியான விழிப்புணர்வு சக்தி அளிக்கின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

வாழ்க்கையை சிறப்பானதாகவோ அல்லது அர்த்தமுள்ளதாகவோ ஆக்குவதற்கு, நாம் என்ன செய்ய வேண்டும் என பெரும்பாலும் நாம் அறிந்திருக்கின்றோம். ஆனால் இப்புரிந்துணர்வை, நம்மால் பழக்கத்திற்கு கொண்டுவர முடியாதிருப்பதை நாம் காண்கின்றோம். இது சிரமமாக இருப்பதனால், பலமுறை முயன்ற பின்னரும் வெற்றி கிடைக்காததால், நாம் முயற்சியை கைவிட்டுவிடக்கூடும்.

செயல்முறை:

“வெற்றி எனது பிறப்புரிமை” அல்லது “என்னுடைய வாழ்க்கைக்கு நானே எஜமான்”, போன்ற சக்திவாய்ந்த எண்ணத்தின் பயிற்சியானது என்னுடைய சொந்த சக்தியை அறிந்துகொள்வதற்கு எனக்கு உதவி செய்கின்றது. தினந்தோறும், இதுபோன்ற சக்திவாய்ந்த எண்ணத்தில் நான் கவனம் செலுத்தும்போது, என்னுடைய நம்பிக்கை வளரும். மேலும், நான் விரும்பியவாறு செயல்படுவதற்கான சக்தியை நான் வளர்த்துக் கொள்வேன்.