இன்றைய சிந்தனை

தியானம் உன்னை உன்னுடைய உள்ளே இருக்கும் புனிதத் தளத்திற்க்கு கூட்டிச்செல்லும்

நீ அங்கே கடவுளை காணலாம் 

வேறு எங்கும் காண முடியாது 
 
உன்னை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை 

அதே போல உன்னை விட தாழ்ந்தவர்கள் யாரும் இல்லை என்பதை 

நீ ஏற்றுக் கொள்ளுதலே உண்மையான எழுச்சியாகும் 
 
எல்லா கருத்துக்களையும் விட்டுவிடு 

நீ நீயாக இரு 

வேறு யாராவது ஒருவரைப் பார்த்து 

அவரை போல மாற முயற்சி செய்து கொண்டிருக்காதே 
 
புத்திசாலியான மனிதன் 

மாறிக் கொண்டும், 
நகர்ந்து கொண்டும், 
ஆடிக் கொண்டும், 
வளர்ந்து கொண்டும் இருப்பான் 

அவனுக்கு வானம் கூட எல்லையாக முடியாது 
 
உன்னுடைய வாழ்க்கையின் விதம் பற்றியும் 

வாழும் முறை பற்றியும் 

உன்னுடைய விழிப்புணர்வு முடிவு செய்யட்டும் 

வேறு யாரும் உனக்காக
அந்த முடிவை எடுக்க நீ அனுமதிக்காதே