இன்றைய சிந்தனை

நம் நம்பிக்கையானது…

இன்னைக்கு உங்களுக்கு மூணு கதை சொல்லப் போறேன்.

1.முதல் கதையில ஒரு அப்பா ஆபீஸ்ல இருத்து வீட்டுக்கு வர்றாரு.

வீட்டுக்குள்ள நுழையும் போது அவரு பொண்ணு போகோ சேனல் பாத்துகிட்டிருக்கிறா. அடுத்த நாள் பரீட்சை. அவ என்ன செய்தா காலையில இருந்து படிச்சிட்டு இருந்தா.

அப்புறம் அம்மா கிட்ட கேட்டுட்டு பத்து நிமிசம் ரிலாக்ஸ் பண்ண டிவி பாத்துகிட்டு இருந்தா. ஆனா அவ அப்பா கண்ணுல என்ன பட்டுச்சி. டிவி பாக்குறது மட்டும்தான் பட்டுச்சி. சட்டுன்னு வந்தாரு. படிக்காம டிவியா பாக்குறன்னு அவர் பையால டிவி மேல வீசினார்.

அது டிவி மேல பட்டு டிவி ரிப்பேர் ஆகுது.

2.இரண்டாவது கதையில ஒரு அம்மா தன் குட்டிக் குழந்தையோட ஒரு கீரிப்பிள்ளையையும் வளக்குறாங்க.

ஒருநாள் குழந்தைக்கு காவலா கீறிப்பிள்ளைய வெச்சிட்டு ஆத்துல தண்ணி எடுக்கப் போறாங்க. அப்போ குழந்தைக்கு பக்கதுல ஒரு பாம்பு கொத்த வருது. உடனே கீரிப்பிள்ள பாம்பு கூட சண்டைப் போட்டு கடிச்சி கிழிச்சி போட்டிருது. கீரிப்பிள்ளை வாயெல்லாம் ரத்தம்.

ஆத்துல இருந்து குடத்த எடுத்துகிட்டு வந்த அம்மாவ நோக்கி கீரிப்பிள்ள ஒடிவருது. அம்மா பாக்குறா.

கீரிப்பிள்ள வாயில இருந்து ரத்தம். வாய் ரத்தம். ரத்தம் வாய். உடனே முடிவு செய்யுறா. ஆஹா நம்ம குழந்தையைத்தான் கீரி கொன்னுட்டு வருதுன்னு என்ன பண்றா.

அந்த தண்ணிக் குடத்த கீரி மேலப் போடுறா. தண்ணி குடம் எவ்வளவு வெயிட்டு, அதுவும் பூமி கீழ இழுக்கிற வேகமும் சேர்ந்து பெரிய எடையா கீரிபிள்ள தலையில் விழுது. கீரிப்பிள்ள அடிபட்டு கிடக்குது. உள்ளப் போய் பாத்தா அங்க பாம்பு கிழிஞ்சி கிடக்குது. குழந்தை தூங்கிகிட்டிருக்கு.

3.மூணாவது கதையில ஒருத்தன் ஒரு நாய ஆசையா வளத்துட்டு வந்தானாம். அவனுக்கு ரொம்ப கஷ்டம் வர, அந்த நாய அடமானம் வெச்சி காசு வாங்கினான்.

நாயை வைச்சிகிட்டு காசு கொடுத்த வியாபாரி கேட்டாராம் “என்னப்பா நாய என்கிட்ட விட்டுட்டு போற. அது என்ன விட்டு உன்கிட்ட ஒடிவந்திராத” அப்படின்னார்.

உடனே இவன் அப்படி வராதுன்னு, நாய் கண்ணப் பாத்து அப்படி வந்திராதன்னு பார்வையில கெஞ்சினான். அன்னையில இருந்து நாய் வியாபாரிக்கு ரொம்ப விசுவாசமா இருந்துச்சி.

ஒருநாள் வியாபாரி இல்லாத நேரம் ஒரு திருடன் வர, நாய் திருடன கடிச்சி விரட்டிட்டாம். உடனே வியாபாரி நாய் மேல அன்பு அதிகமாகி “சரி நீ இனிமே உன் எஜமானன் கிட்டையே போயிரு. எனக்கு சேவை செய்தது போதும். நான் கடன் பத்திரத்த கிழிச்சிப் போட்டிரேன்னு அனுப்பி வெச்சான்.

நாய் ஆசை ஆசையா எஜமானன தேடி வருது. இங்க நம்ம ஆள் நாயை மீட்டுக்கிறதுக்கு காசு சேத்துட்டு வேகமா வர்றான். எதுத்தாப்புல நாய் வால ஆட்டிக்கிட்டு வருது.

அதப் பாத்து தப்பா நினைச்சிர்ரான் “ஏய் நாயே. நாந்தான் உன்ன நா வர்ற வரைக்கும் வியாபாரிக்கி விசுவாசமா இருன்னு சொன்னேனே, நீ துரோகம் பண்ணிட்டு தப்பிச்சி ஓடிவர்றியா”என்று சொல்லிட்டு தன் கையில இருக்கிற கம்ப வெச்சி நாய் மேல ஒரே அடி.

நாய் பாவமா அடிபட்டு தரையில கிடக்குது.

இதுல பாருங்க மூணு கதையிலையுமே நாம் கண்ணால பாக்குற காட்சிய அப்படியே நம்புறோம். கண்ணு பாக்குது, டக்குன்னு முடிவெடுக்குறோம்.

அப்பா பொண்ணு மேல கோபப்படுறார்.
அம்மா கிரிப்பிள்ள மேல குடத்தைப் போடுறாங்க.
எஜமானன் நாய் மேல கம்பு வீசுறான்.

இன்னொன்னயும் கவனிங்க மூணு பேரையுமே மூணுபேருக்கும் ரொம்ப பிடிக்கும்.

அப்பாவுக்கு பொண்ணப் பிடிக்குது.
அம்மாவுக்கு கீரிபிள்ளைய பிடிக்குது. அதனாலத்தான் குழந்தைக்கு காவலா வெச்சிட்டு போறாங்க.
எஜமானனுக்கு நாயை ரொம்ப பிடிக்குது.

இவ்வளவு பிடிச்சிருந்தாலும் ஏன் கண்ணால பாக்குற காட்சியை நம்புறாங்கன்னு யோசிங்க.

ஏன் கண்ணால பாக்குற காட்சியை நம்புறாங்கன்னா அவுங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்கள ரொம்ப நம்பல.

ரொம்ப ரொம்ப பிடிச்சவங்க மேல ரொம்ப ரொம்ப நம்பிக்கை இல்லை.

என்னைக்குமே நமக்கு ரொம்ப பிடிச்சவங்க மேல நம்பிக்கை வைக்கனும். நமக்கு பிடிக்காத ஒண்ண அவுங்க செய்தாக கூட டக்குன்னு அந்த அப்பா மாதிரியோ, அந்த அம்மா மாதிரியோ, அந்த எஜமானன் மாதிரியே டக்குன்னு உணர்ச்சிவசப்பட்டிரக் கூடாது.

பொறுமையா அவுங்கள நம்பி மெல்லமா அன்பா விசாரிக்கனும்.

அவசரப்பட்டா அது பெரிய இழப்புல கொண்டு விட்ரும்.