இன்றைய சிந்தனை

தமிழ் பயிலகம் ~ ஆரம்பமும் அதன் வளர்ச்சியும்- ஒரு பார்வை

தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் கலை, இலக்கிய முயற்சிகளைப் பற்றி பேசுவதை விட, இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறையினருக்கு தமிழ் மொழியினை கற்பித்தல் தான் இப்போதைய அவசரமாகவும், அவசியமாகவும் இருப்பதை நன்றாக உணர்ந்ததின் உச்ச கட்ட முயற்சியாக, “தமிழ் பயிலகம்”அக்டோபர் மாதம் 2008 அன்று துவங்கப்பட்டது.

தமிழ் மொழியின் வளர்ச்சியும், தொடர்ச்சியும் அந்தந்த நாடுகளின் முயற்சியில் தான் இருக்கிறது.
இனியும் நாம் பிறந்த மண்ணை நம்பி இருக்கமுடியும் என்கிற சூழல் அங்கேயில்லை என்பதை சமீபமாக உணரமுடிகிறது. தங்கள் பிள்ளைகள் தமிழ் பேசி விடகூடாத என்பதில் பெரும்பாலான பெற்றோர்கள் அதிகவனமாக இருக்கின்றனர் நமது தாயகத்தில்.

அதேசமயம் வெளிநாட்டில் வாழும் பெரும்பாலான தமிழ் குடும்பங்களுக்கு, தங்கள் மொழியின் மீதான காதல் சற்று கூடுதலாக இருப்பதின் பொருட்டே, தம் வாரிசுகளுக்கு தமிழ் கற்று தருவதற்க்கான சூழல்களை அமைத்து தருகின்றனர். அந்த உந்துதலுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், தமிழ் பயிலகம் தமிழ் தொண்டை தளராமல் செய்து கொண்டிருக்கிறது.
ஒருமித்த தமிழ் உணர்வாளர்களின் ஒத்துழைப்பில் தான் இந்த முயற்சிகளின் வெற்றி இருக்கிறது.

உலகின் முதல் மொழி தமிழ் – கவிஞர் இரா .இரவி !