தூத்துக்குடியில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

தூத்துக்குடி நகரின் சில பகுதிகளில் (வியாழக்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி நகர் செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தூத்துக்குடி நகர் கோட்டம், டவுன் துணை மின் நிலையத்தில் இருந்து மின்னூட்டம் பெறும் பிரையன்ட் நகர் 2 மற்றும் 3வது தெருவுக்கு இடையில் பிரதான சாலையில் அமைந்துள்ள காற்று திறப்பானில் சேதமடைந்த மின் கம்பம் அமைக்கும் பணி மேற்கொள்ள இருப்பதால் 09.07.2020 (வியாழக்கிழமை) பிரையன்ட் நகர் 1,2,3,4,5 தெருக்கள், மேற்கு மற்றும் மத்திய பகுதி, சிதம்பர நகர், ஆட்டோ காலனி, அம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தூத்துக்குடி நகர் கோட்டம்.நகர் கிழக்கு பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட தெற்கு பீச் ரோடு, ரோச் பார்க் அருகாமையில் டவுன் துணை மின் நிலையத்தில் இருந்து மின்னூட்டம் செய்யப்படும் மில் 2 உயரழுத்த மின் பாதையில் மின் கம்பிகள் தரம் உயர்த்தும் மேம்பாட்டு பணிகள் 09:07:2020 வியாழக்கிழமை நடைபெற உள்ளதால் பழைய அரசினர் மாளிகை, மத்திய மீன் வள ஆராய்ச்சி நிலையம், ரோச் பூங்கா மற்றும் அதன் அருகாமையில் அமைந்துள்ள உப்பளப்பகுதிகளுக்கு காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று செயற்பொறியாளர் /நகர்/தூத்துக்குடி அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.