டிஎன்பிஎஸ்சி தேர்வுமுறைகளில் அதிரடி மாற்றங்கள்

டிஎன்பிஎஸ்சி தேர்வுமுறைகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் தேர்வு முறையில் பல அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு

  • குரூப் 4, குரூப் 2ஏ ஆகிய தேர்வுகளில் பொதுஅறிவு தாள் மட்டுமே கொண்ட ஒரே ஒரு தேர்வு மட்டுமே இதுவரை நடந்துவந்தது. இனிவரும் காலங்களில் இந்த தேர்வுகள் முதனிலை, முதன்மை தேர்வுகளாக நடந்தப்படும் என்று அறிவித்துள்ளது.
  • காலை 10 மணி முதல் 1 மணி வரை என் 3 மணிநேரம் நடக்கும் இந்த தேர்வுகளுக்கு, தேர்வு எழுதும் நபர்கள் காலை 9 மணிக்கே அறைக்கு வரவேண்டும். 10 மணிக்கு வருவோர் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • அனைத்து வினாக்களுக்கும் விடைகள் அளிப்பது கட்டாயமாகும். ஏதேனும் ஒரு வினாவுக்கு பதில் அளிக்கவில்லை என்றால் விடைத்தாள் செல்லாததாக்கப்படும்.
  • விடைத்தாளில் தேர்வரின் கையெழுத்துக்குப் பதில் கைரேகை பதிவு செய்யப்படும்