குழந்தைகள் ஆபாச படத்தை பரப்பும் குழுக்களை கண்டுபிடித்தது – தமிழ்நாடு போலீஸ்

குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களை பார்ப்பதும் அல்லது அதனை இணையதளத்தில் பதிவிறக்கம், பதிவேற்றம் செய்வதும் குற்றம் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு பற்றியும் அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் எனவும் ஏ.டி.ஜி.பி. எம்.ரவி தெரிவித்திருந்தார். மேலும், குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை பார்ப்பவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், தமிழகத்தில் 3 குழுக்கள் குழந்தைகளின் ஆபாச படங்களை சேமித்து வைத்து பரப்பி வருவது கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.