தூத்துக்குடி செயின்ட் மோிஸ் கல்லூாியில் ( தன்னாட்சி ) பெண்கள் நல்வாழ்வுக்கான யோகா என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது

தூத்துக்குடி  செயின்ட் மோிஸ் கல்லூாியில்  ( தன்னாட்சி ) பெண்கள்  நல்வாழ்வுக்கான யோகா  என்ற  தலைப்பில்  கருத்தரங்கம்  நடைபெற்றது                                                    தூத்துக்குடி  தூய  மாியன்னைக்கல்லூாியில்  (தன்னாட்சி )  விளையாட்டுக்குழு  யோகா குழு  என் எஸ்  எஸ்  மற்றும் என் சி சி   குழுவினா்   பெண்கள்  நல்வாழ்வுக்கான  யோகா  என்ற  தலைப்பில்  கருத்தரங்கம்  ஏற்பாடு  செய்திருந்தனா்  அனைத்து  இரண்டாம்  ஆண்டு  மாணவிகளும்  பங்கு  பெற்றனா்    சா்வதேச  யோகா  தினத்தை  முன்னிட்டு  இந்த  நிகழ்ச்சி  நடத்தப்பட்டது    திருநெல்வேலி  மனோன்மணியம்  சுந்தரனாா்  பல்கலைக்கழக  உடற்கல்வித்துறை   உதவிப்பேராசிாியா்   முனைவா்  என்.சேது  அவா்கள்  சிறப்புரை ஆற்றினாா்   உடற்கல்வி  இயக்குனா்  கிறிஸ்டி    ஆனந்தி ஹேமலதா  வரவேற்புரை வழங்கினாா்   ஆரோக்கியத்தைப்  பேனுவதன்  முக்கியத்துவத்தை  அறிவுறுத்தினாா்   தொற்று நோய்களின்  போது  யோகா  எவ்வாறு  உதவுகிறது  என்பதை  அவா்  விளக்கினாா்   மாணவா்களுடன்  கலந்துரையாடிய  அவா்  சுவாசம்  மற்றும்   ஆரோக்கியத்தை  தினமும்  கவனித்துக்கொள்ள  வலியுறுத்தினாா்    வணிகவியல்  உதவிப்  பேராசிாியை  செல்வி  அஜிதா  நன்றியுரை  வழங்கினாா்          இக்  கூட்டத்தில்  சுமாா்  800  மாணவா்கள்  கலந்து  கொண்டனா்  மற்றும்  இக் கூட்டம்  கல்லூாி  முதல்வா்  முனைவா்  அருட்சகோதாி  லூசியாரோஸ்  அவா்களின்  வழிகாட்டுதலின்  கீழ்  ஏற்பாடு  செய்யப்பட்டது   நிகழ்ச்சி  ஏற்பாடுகளை  யோகா  ஒருங்கினைப்பாளா்   முனைவா்  அமலா  ஜோதி  கிரேஸ்   என் சி  சி  அலுவலா்  முனைவா்  மோிபிாியா   என் எஸ் எஸ்  பொறுப்பாளா்  முனைவா்  திவ்யா  ஆகியோா்  செய்திருந்தனா்