உயிர்ச்சூழல் பாதுகாப்பு கருத்தரங்கம்” நிகழ்வில் இன்று (24/05/2022) தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.

தூத்துக்குடி, தெற்கு கடற்கரைச் சாலையில் உள்ள பெல் ஹோட்டல் கூட்டரங்கில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து துப்பாக்கிச் சூட்டால் உயிரிழந்த 13 போராளிகளின் நான்காம் ஆண்டு நினைவாக, ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைத்த “உயிர்ச்சூழல் பாதுகாப்பு கருத்தரங்கம்” நிகழ்வில் இன்று (24/05/2022) தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.

கருத்தரங்கில் மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு – தேசிய அமைப்பாளர் மேதா பட்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி, மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, SDPI தலைவர் நெல்லை முபாரக், பச்சை தமிழகம் கட்சித் தலைவர் சுப. உதயகுமாரன், பூவுலகின் நண்பர்கள் கோ.சுந்தர்ராஜன் ஆகியோரும் பங்கேற்று உரையாற்றினார்கள்.