பொது மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் நிலையில் சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பம்: தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகர் அண்ணா மெயின் ரோடு முச்சந்தி மாரியம்மன் கோவில் அருகில் பொது மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் நிலையில் மின் கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது. கால்வாய் தோண்டும் போது அருகிலுள்ள கடைக்காரர்கள் கூறியும் அதனைப் பொருட்படுத்தாமல் தோண்டி மிகவும் ஆபத்தான நிலையில் போஸ்ட் கம்பம் சரிவு நிலையில் உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி மேற்கு மண்டலம் தலைவர் L.R.சரவணக்குமார் அவர்கள் வலியுறுத்தி உள்ளார்.