வெளிநாடு சென்று வந்தவர்கள் உடனடியாக தங்களது விவரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் : தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலத்திற்குள் வெளிநாடு சென்று வந்தவர்கள் உடனடியாக தங்களது விவரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு சந்தீப் நந்தூரி இ .ஆ .ப அவர்கள் தகவல்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த ஒரு மாத காலத்திற்குள் வெளிநாடு சென்று வந்தவர்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நமது மாவட்டத்திற்கு திரும்ப வந்தவர்கள் அனைவரும் தங்களது முகவரி மற்றும் பயண விவரங்களை உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு 0461- 2340101 எனும் தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்க வேண்டும் மேலும் வெளிநாடு சென்று வந்தவர்கள் குறித்த விவரங்களை தெரியவரும் பொதுமக்களும் இதுகுறித்த விவரங்களை உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு 0461 – 23401O1தொலைபேசி எண்ணிற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்