தூத்துக்குடி V.0.C இன்ஜினியரிங் கல்லூரியில் ராக்கிங் சட்ட விழிப்புணர்வு முகாம்

தூத்துக்குடியில் ராக்கிங் சட்ட விழிப்புணர்வு முகாம். முதன்மை மாவட்ட |நீதிபதி பங்கேற்பு : இன்று 30-7-2019 யுனிவர்சிட்டி V.0.C இன்ஜினியரிங் கல்லூரி, தூத்துக்குடியில் வைத்து ANTI RAGGING LAWS கேலி வதை தடுப்புச் சட்டம் சம்மந்தமாக இஞ்ஜினி ரியரிங் கல்லூரி மாணாக்கர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அதில் மேற்படி கல்லூரியை சேர்ந்த பேராசிரியர் முனைவர் P. மதுமதி வரவேற்பு உரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் B. ஜெயந்தி தொடக்கவுரையாற்றினார். தலைமை குற்றவியல் நடுவர் திருமதி S. ஹேமா சிறப்புரையாற்றினார்.தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிபதி மாண்புமிகு திரு. M.சுரேஷ் விஸ்வநாத் தலைமையுரையாற்றினார். அவர் தன்னுடைய தலைமையுரையில் ராக்கிங் என்பது மேற்கத்திய நாடுகளில் கலாச்சாரமாக உள்ளது ஆசிய கண்டத்தில் அது குற்றமாக கருதப்படுகிறது ஒவ்வொரு விசயமும் நாம் அனுகும் முறையில் தான் உள்ளது நாம் ஒரு விசயத்தை நல்ல முறையில் அணுகினால் மற்றவர்கள் பயனடைவார்கள் எனவே புதிதாக சேரவரும் மாணவ மாணவிகளுக்கு சீனியர் மாணவ மாணவிகள் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். கல்லூரி வாழ்க்கையின் போது செய்யப்படும் குற்றங்கள் குற்றம் செய்த அந்த நபரின் எதிர்காலத்தை, முன்னேற்றத்தை அரசுப்பணி உள்ளிட்ட உயர்பதவிகளை அடைவதை பாதிக்க செய்யும் எனவே கல்லூரி மாணவ மாணவிகள் குற்றசெயலில் ஈடுபடாமல் நன்னெறிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறினார்.முகாமில் கல்லூரி மாணாக்கர்களுக்கு கேலி வதை தடுப்பு சம்மந்தமாக விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.முகாமில் பயிற்சி நீதிபதிகள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் சுமார் 600 கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரான சார்பு நீதிபதி திரு R. சாமுவேல் பெஞ்சமின் முகாம் ஏற்பாடுகளை செய்து நன்றியுரையாற்றினார்.