டேட்டா சயின்ஸ் துறையில் தூத்துக்குடி இளைஞர் சாதனை!

உலகமெங்கும் முன்னணியில் இருக்கும் டேட்டா சைன்ஸ் துறையில் தூத்துக்குடி இளைஞர் பல்வேறு சாதனை படைத்து வருகிறார்.

தூத்துக்குடி இந்திராநகரை சேர்ந்தவர் மகாராஜன். தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். இவரது மனைவி சந்திரா. தலைமைஆசிரியையாக பணிபுரிகிறார். இத்தம்பதியின் மகன் விஜய் பிரவீன் மகாராஜன் (29). 

தூத்துக்குடி காரப்பேட்டை பள்ளியில் பள்ளி படிப்பு முடித்த இவர் ஈரோட்டில் பிஇ படித்து முடித்து விட்டு ஜெர்மனியில் எம்எஸ் படித்து முடித்தார். தற்போது ஜெர்மனியில் சிமென்ஸ் எனும் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவர் பெங்களூருவில் நடைபெற்ற விழாவில் சிறந்த டேட்டா சைன்டிஸ்ட் விருது பெற்று சாதனை படைத்துள்ளார்.

தற்போதைய இணையதள உலகில் ஒரு பொருளை வாங்குவது முதல், திருமணம், உணவு ஆர்டர் செய்வது என அனைத்திற்கும் இணையத்தை தான் இளைஞர்கள், பொதுமக்கள் நாடுகின்றனர். அப்படியிருக்க ஒரு மனிதனின் கடந்த கால நடவடிக்கைகளை வைத்து அவரது எதிர்கால நடவடிக்கைகள் எப்படியிருக்கும் என கணிப்பது டேட்டா சைன்ஸ் எனப்படுகிறது.பேஸ்புக்கில் நண்பர்கள் குறித்த தகவல்கள், அமேசான் போன்ற பாெருட்கள் வாங்கும் தளத்தில் ஒரு பொருள் வாங்கும் போது அதோடு தொடர்புடைய பிற பொருட்களுக்கான தேவை குறித்து தெரிவிப்பது போன்றவை இதில் அடங்கும். 

 இணையதள உலகில் தற்போது டேட்டா சைன்ஸ் முக்கிய பணியாக உள்ளது. கடந்த நவம்பர் மாதம் பெங்களூருவில் டேட்டா சைன்ஸ் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் 40 வயதிற்கு கீழ் உள்ள டேட்டா சைன்டிஸ்ட்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தில் கலந்து கொண்ட சிலரில் நானும் ஒருவன். சிறந்த டேட்டா சைன்டிஸ்ட் விருது எனக்கு கிடைத்தது. ஜெர்மனியில் நடைபெற்ற தொழில்நுட்பம், வடிவமைப்பு ஆகியவற்றிற்கான புகழ் பெற்ற டெட்எக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் வாய்ப்பு கிடைத்தது. இதில் நான் தமிழகத்தின் ஜல்லிக்கட்டு பற்றியும் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பற்றியும் பேசினேன். தற்போது உலகமெங்கும் நடைபெறும் தொழில்நுட்ப கருத்தரங்குகளில் என்னை பேச அழைக்கின்றனர்.

முன்பு ஆங்கிலம் சரளமாக பேச தெரியாமல் இருந்தேன். தற்போது எனக்கு ஆங்கிலம், ஜெர்மன் மொழி சரளமாக பேச வரும். டேட்டா சைன்ஸ் தொழில்நுட்பத்தை அமெரிக்கா அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடி ஆகியோர் பயன்படுத்துகின்றனர் . டேட்டா சைன்ஸ் மூலம் மெட்ரோ ரயில் தாமதத்தால் மக்களுக்கு என்ன இடையூறு ஏற்படுகிறது? தற்போது இந்தியாவில் மெட்ரோ ரயிலில் எந்த பாகங்கள் தற்போது வேலை செய்கிறது? அவற்றில் பிரச்சனை வரும் என்பதை முன் கூட்டியே கணித்து கூற முடியும். 

எனது செயல்பாடுகள் மூலம் பிற இளைஞர்களுக்கு முன்னோடியாக திகழ வேண்டும். வசதி வாய்ப்பு உள்ளவர்கள் மட்டுமின்றி சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவர்களும் சாதிக்க முடியும் என இளைஞர்களுக்கு நம்பிக்கை விதைப்பதே என்பதே என் நோக்கம் என தெரிவித்தார். டேட்டா சைன்ஸ் துறையில் சாதித்த தூத்துக்குடி இளைஞர் விஜய் பிரவீன் மகாராஜனுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.