தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ஊழியர்கள் நேற்று திடீரென உள்ளிருப்பு போராட்டம்

உள்ளிருப்பு போராட்டம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் கூடுதல் நேரம் பணியாற்றியதற்கான பணம், ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படும். கடந்த மாதம் கூடுதல் நேரம் பணியாற்றிய வர்களுக்கான பணம், இந்த மாத ஊதியத்துடன் சேர்த்து வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர் தொடர்ந்து எச்.எம்.எஸ். சங்க நிர்வாகி சத்தியநாராயணன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி சண்முககுமாரி ஆகியோர் தலைமையில் துறைமுக ஊழியர்கள், துறைமுக நிர்வாக அலுவலகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்பு கழக துணைத்தலைவர் பிமல்குமார்ஜா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, 2 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது