தூத்துக்குடியின் சிறப்பு!

பொதிகைத் தமிழ் முனிவன் அகத்தியனுக்கு, பாண்டிய மன்னர்களும் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த பாண்டிய நாட்டின் தென் கடலோரப் பகுதியே தூத்துக்குடி மாவட்டம். “முத்துக் குளிப்பதோர் தென் கடலிலே” எனப் பாட பெரும் இப்பகுதி பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டது. தமிழரின் ஆட்சி, நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் பூமி இது. பல்வேறு சமயங்களை சார்ந்த ஆன்மிக வழிபாட்டுத் தலங்கள் நிறைந்த புண்ணிய பூமி இது. புலவர்களின் பாட்டுத் திறத்தால் இவ்வையகத்தைப் பாலிக்கவைத்த பூமி இது. ஆங்கலேயர்களை எதிர்த்து வீர முழக்கமிட்ட விடுதலை வீரர்கள் தோன்றிய வீரம் செறிந்த பூமி இது. நீர் வளம் நில வளம் நிறைந்த விவசாயப் பூமி இது. கடல் வளமிக்க கடல் சார் பூமி இது. வணிகமும் தொழிலும் பல்கிப் பெருகி மையம் கொண்டுள்ள பூமி இது. மேலும்,
தொல்பொருள்அகழாய்வு,
வழிபாட்டுத்தலங்கள்,
தாமிரபரணி ஆறு,
புலவர் பெருமக்கள்,
விடுதலைப் போராட்ட வீரர்கள்,
இசைவாணர்கள்,
நாடகக் கலைஞர்,
மாநகர் கோயில்கள்,
முதன்மைச் சாலைகள்,
போக்குவரத்து வசதிகள்,
கல்விநிலையங்கள்,
பொழுதுபோக்கு அமசங்கள்,
மீன்பிடித்துறைமுகம்,
வணிக வளாகங்கள் என அனைத்தும் பற்றி விரிவாக அடுத்த பதிவில் பார்க்கலாம்.