சாலை பாதுகாப்பு இணையதளம் – தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்களும் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த இணையதளத்தை (http://www.safetuty.org) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு அருண் பாலகோபாலன் இ.கா.ப. அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பணிகளில் சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம், சாலையில் எவ்வாறு பாதுகாப்பாக பயணிப்பது மற்றும் அடிப்படை போக்குவரத்து விதிகள் ஆகியவற்றை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போது அவர்களின் இளம் மனதில் சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை பதிய வைப்பதற்கான சாலை பாதுகாப்பு சங்கம் உருவாக்கப்பட்டு அதற்கான Home (Transport – V) Deportment G.O அரசாணை எண் 2438 நாள் 31.12.2015 இன் படி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆறாவது வகுப்பு முதல் ஒன்பதாவது வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் 100 பேர் வீதம் மொத்தம் 21,100 பேர் கொண்ட 211 சாலை பாதுகாப்பு சங்கம் உருவாக்கப்பட்டது.

இவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி, விபத்துகளை குறைப்பதற்கு அவர்களின் அறிவையும், திறமையையும் மேம்படுத்துவதோடு, அவர்கள் மற்ற நபர்களுக்கு சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் தூதர்களாக செயல்பட்டு சாலை விபத்துகளில் யாரும் இருக்கக்கூடாது என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இச்சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இச்சங்கத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 211 பள்ளிகளில் சாலை பாதுகாப்பு சங்கம் உருவாக்கப்பட்டு இன்று மேற்படி 211 பள்ளிகளில் உள்ள அனைத்து சாலை பாதுகாப்பு சங்கம் ஆலயம் மாவட்ட ஆட்சியர் திரு.சந்திப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் சிறப்புரையாற்ற துவக்கி வைத்தார்.

இந்த சாலை பாதுகாப்பு சட்டத்தின் மாவட்ட அதிகாரியாக மாவட்ட ஆட்சியரும் மாவட்ட இணை அதிகாரியாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் 6-வது வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் உறுப்பினராகவும் பங்கு பெறுவார்கள்.

இச்சங்கத்தின் ஆலோசனை குழு தலைவராக காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு.குமார் அவர்கள் செயல்படுவார். இதில் மாநில போக்குவரத்து கிளை மேலாளர் முதன்மைக் கல்வி அலுவலரும், அவசர சிகிச்சை பிரிவு (108) நிர்வாகி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர், St.ஜான்ஸ் ஆம்புலன்ஸ் அசோஷியேஷன், மாவட்ட செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரி ஆகியோர் ஆலோசனை குழுவில் இடம் பெறுவார்கள். தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக சாலை பாதுகாப்பிற்கான http://www.safetuty.org இணையதளத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு அருள் பாலகோபாலன், இ.கா.ப. அவர்கள் துவக்கி வைத்தார்.

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு மன்ற நடவடிக்கைகள் சாலை விதிகள் மற்றும் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து வாகனம் ஓட்டும் போது மக்கள் தெரிந்துகொள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் உருவாக்கப்பட்டுள்ள http://www.safetuty.org என்ற இணையதளத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு அருண் பாலகோபாலன் இ.கா.ப. அவர்கள் சிறப்புரை ஆற்றி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாலை விபத்துகளை தவிர்ப்பதற்காக சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தவும் சாலை விதிகளை மீறுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் காவல்துறை கூடுதல் பாதுகாப்பாளர் திரு குமார் அவர்கள் மேற்பார்வையில் 75 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு தனி படைகளும் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 2 காவலர்கள் செயல்படுவார்கள்.