தூத்துக்குடியில் மின்தடை பகுதிகள் அறிவிப்பு

தூத்துக்குடி நகர் கோட்டம் நகர் கிழக்கு பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட தெற்கு பீச் ரோடு ரோச் பார்க் அருகாமையில் டவுன் துணை மின் நிலையத்தில் இருந்து மின்னூட்டம் செய்யப்படும் மில் 2 உயரழுத்த மின் பாதையில் மின் கம்பிகள் தரம் உயர்த்தும் மேம்பாட்டு பணிகள் 08/07/2020 புதன்கிழமை நடைபெற உள்ளதால் இனிகோ நகர், பழைய அரசினர் மாளிகை, மத்திய மீன் வள ஆராய்ச்சி நிலையம், ரோச் பூங்கா மற்றும் அதன் அருகாமையில் அமைந்துள்ள உப்பளப்பகுதிகளுக்கு காலை 10:30 மணி முதல் மாலை 4:30மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று செயற்பொறியாளர் தூத்துக்குடி அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.