முதல் இடம் பிடித்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை.

தமிழ்நாடு காவல்துறை அமைச்சு பணியாளர்களுக்கான 2019 -2020 ஆம் ஆண்டுக்கான மாநில அளவில் நடைபெற்ற 59வது விளையாட்டுப் போட்டியில் முதலிடத்தைப் பிடித்து விருது பெற்ற தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அமைச்சு பணியாளர்களை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப. அவர்கள் பாராட்டினார்.

இவ்விளையாட்டு போட்டி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 31.01.2020 முதல் 02.02.2020 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காவல்துறை அமைச்சு பணியாளர்கள் சார்பில் விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், சேலம் ,கோயம்புத்தூர் திருச்சி ,தஞ்சாவூர், ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய சரகங்களில் இருந்தும், சென்னை தலைமையிடம், சென்னை பெருநகர காவல்துறை, செயலாக்க பிரிவு (I.G Operation) ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஆகியவற்றில் இருந்து சுமார் 500 வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதில் டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து, இறகுப்பந்து, கைப்பந்து, கபாடி போட்டி, கேரம் போர்டு, செஸ் போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டிகளில் கபாடி போட்டியில் திருநெல்வேலி சரக காவல் துறை அமைச்சு பணியாளர்கள் சார்பில் போட்டியிட்ட தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அமைச்சு பணியாளர்களான திரு. மயில்குமார், கணேசபெருமாள், கதிரேசன், சேர்மதுரை, கோபிநாத், மேண்ட்லி, முனியசாமி, முத்துச்சாமி, ராமஜெயம், ராஜ்குமார் திருநெல்வேலி மாவட்ட காவல் துறை அமைச்சு பணியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சுரேந்திர பாண்டியன், செல்வகுமார், சுப்பையா, சீனிவாசன், ராஜசூரியன், மார்க்தாசன், ரஞ்சித்பாபு ஆகியோர் கலந்துகொண்டு மாநிலத்தில் முதலிடம் பிடித்து விருது பெற்றுள்ளனர்.

இதில் தமிழ்நாடு அளவில் சிறந்த கபாடி ஆட்டக்காரராக தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அமைச்சு பணியாளர் கதிரேசன் தேர்வு பெற்று விருது பெற்றுள்ளார்.

வெற்றி பெற்ற தூத்துக்குடி மாவட்ட அமைச்சுப் பணியாளர்களை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப. அவர்கள் பாராட்டினார்.