தூத்துக்குடி மாவட்டத்தில் காரனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரானா பாதிக்கப்பட்ட அனைவரும் குணமான நிலையில் கொரானா வாய்ப்பே இல்லாத மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் அனைத்து பகுதிகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் 24 மணி நேரமும் பணி அமர்த்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கென சோதனை சாவடி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட தேவையான இடங்கள் தயார் நிலையில் உள்ளது.
தற்போது சென்னை மாவட்ட பகுதியில் இருந்து பொதுமக்கள் வருவது அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து வருபவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின்பு வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்தவர்கள் தங்களது விவரங்களை உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 0461-2340101, 2340214, 2340307, 2340314, 2340378 மற்றும் 9486454714 என்ற தொலைபேசி எண்ணிலும் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் கோயம்பேடு பகுதியில் இருந்து வருகை தந்தவர்கள் தங்கள் பகுதியில் இருப்பின் பொதுமக்களுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி அவர்கள் தெரிவித்துள்ளார்.