மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் திரு. சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் மலேசியா நாட்டில் நடைபெறும் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதி பெற்ற 7 ஸ்கேட்டிங் வீரர்களுக்கு பதக்கங்கள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவ படுத்தினார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் திரு. சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை தூத்துக்குடி மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில் மாணவ மாணவியர்களுக்கு இளம் படைப்பாளர் விருதுகளை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் திரு. சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் கருணை அடிப்படையில் அங்கன்வாடி பணியாளருக்கான பணி நியமன ஆணையினை ஒரு நபருக்கு வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் மாற்றுத்திறனாளிகளின்
இருப்பிடங்களுக்கு சென்று
கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.