தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டம் சார்பாக 472 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்

தூத்துக்குடி போல்டன்புரம் பகுதியில் கொரோனா பாதுகாப்பு காரணமாக தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் உணவு பொருட்கள் இன்றி தவித்து வருவதை அறிந்த தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டம் சார்பாக சுப்பையா முதலியார் புரம், சார்லஸ் ஆலயம் முன்பு இன்று (21-04-20),மேதகு ஆயர் ஸ்டீபன் தலைமையில் போல்டன்புரம் பகுதியில் 472 குடும்பங்களுக்கு அரிசி, பலசரக்கு வழங்கப்பட்டது.