தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை ரத்து செய்யக்கோரி தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மாணவர்கள் சார்பில் கருப்புத் துணியால் கண்களைக் கட்டி நூதன போராட்டம்

தேசிய மருத்துவ ஆணைய அறிக்கையை ரத்து செய்ய கோரியும் அதுபோல் மருத்துவக் கல்லூரிகளில் நான்காம் ஆண்டு இறுதித் தேர்வில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ள நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்ய கோரியும் நீட் தேர்வுக்கு தமிழகத்தில் விலக்கு அளிக்க வேண்டும் மருத்துவராக இல்லாதவர்கள் கிராமப்புறங்களில் சிகிச்சை அளிக்கலாம் என்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நான்காவது நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் படிக்க கூடிய சுமார் 400 மாணவ மாணவியர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக அமர்ந்து கண்களில் கருப்பு துணியை கட்டி தங்களின் போராட்டத்தை நடத்தினார்கள் மேலும் மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் அது போல் நெக்ஸ்ட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பினார்கள் தங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை இந்த போராட்டம் தொடரும் என போராட்டத்தில் பங்கேற்று உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.