சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அதிகமான கூட்டம் கூடியதால் கடை சீல்: தூத்துக்குடி

கோரானா நோய்த்தொற்று பரவுதலை தடுக்கும் விதமாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு மற்றும் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வுகளை வழங்கிவருகிறது இந்நிலையில் இன்று தெற்கு புதுத்தெரு பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அதிகமான கூட்டங்களை கூட்டுவதற்காக மேற்படி தடையானது மாநகராட்சி அலுவலர்களால் பூட்டி சீல் வைக்கப்பட்டது