தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய இயற்கை பானம் வழங்கப்பட்டது

கொரோனா தொற்று வராமல் தடுக்கும் வகையில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆரோக்கியம் என்ற தமிழக அரசின் சிறப்பு திட்டத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு மூலமாக நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய இயற்கை பானம் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பி.ரேவதி, உறைவிட மருத்துவர் சைலஸ் அனுமதி உடன் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு தலைவர் டாக்டர். பிரேமலதா இன்று தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு வழங்கினார். பத்திரிக்கையாளர் மன்ற செயற்குழு உறுப்பினர் தூர்தர்ஷன் செய்தியாளர் லட்சுமணன் ஏற்பாட்டில் வழங்கப்பட்ட இதனை பத்திரிக்கையாளர் மன்ற கௌரவ ஆலோசகர் மு.அருண் பெற்றுக்கொண்டார். உடன் பத்திரிக்கையாளர் மன்ற தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.

இந்த பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டு 50 மில்லியாக வற்ற வைத்து இளம் சுட்டுடன் தொடர்ந்து 3 நாட்கள் அருந்த வேண்டும். இதில் நெல்லிக்காய்,இஞ்சி, அதிமதுரம் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளதால் சுவையாக இருக்கும். வீட்டிலே தயாரிக்க ஏதுவான இது பற்றிய குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக பொடி தேவை படும் பத்திரிக்கையாளர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவில் சென்று பெற்று கொள்ளலாம்.