அரசினர் தொழிற் பயிற்சி நிலைய பட்டமளிப்பு விழா – தூத்துக்குடி

தூத்துக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய பட்டமளிப்பு விழாவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டம் வழங்கி பாராட்டினார்.

கடந்த 2017 முதல் 2019 வரை இரண்டு ஆண்டுகள் தூத்துக்குடி மற்றும் வேப்பலோடை ஆகிய அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் மின்சார பணியாளர், கடைசலர், இயந்திர வேலையாள், பொருத்துனர் உட்பட 7 பிரிவுகளில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் 89 பேருக்கு தூத்துக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, இரண்டாண்டு பயிற்சியில் தேர்ச்சி பெற்ற தூத்துக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தை சேர்ந்த 70 மாணவ, மாணவிகள் மற்றும் வேப்பலோடை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தைச் சேர்ந்த 19 மாணவ, மாணவிகள் உட்பட 89 பேருக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினார்.

இவ்விழாவிற்கு தூத்துக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய துணை இயக்குனர் மற்றும் முதல்வர் பழனி தலைமை உரையும், பயிற்சி அலுவலர் முருகன் வரவேற்புரையும், பயிற்சி அலுவலர் திருமதி. வள்ளி நன்றியுரையும் ஆற்றினர்.

இப்பட்டமளிப்பு விழாவில் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.