தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்றைய பேட்டி

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் பத்திரிக்கை நிருபர்களுக்கு அளித்த பேட்டி.

ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவகளையில் நேற்று இரவு நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் தனிப்படையினர் எதிரிகளை விரைந்து கைது செய்துள்ளனர்.

சிவகளையில் அரிவாளால் வெட்டி தாக்கப்பட்டவர்கள் :

(02.07.2020) இரவு ஏரல் காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட சிவகளையில் உள்ள பஞ்சாயத்து அலுவகம் முன்பு சிவகளை பரம்பு, பெருமான் கோவில் தெருவைச் சேர்ந்த லெட்சுமணன் என்பவர் மனைவி முத்துப் பேச்சி (வயது 42), அவரின் கணவர் லெட்சுமணன் (வயது 52), மகன் விக்னேஷ் ராஜா (வயது 22) , அவரது உறவினர் சிவகளை, அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கசமுத்து என்பவரது மகன் அருண் விக்னேஷ் (வயது 26) ஆகியோர் ஏரல் முதலியார் தெருவைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் முத்துராமலிங்கம் என்ற ராஜா (வயது 23), ஏரல் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுந்தரம் மகன் முத்துச்சுடர் (வயது19) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அய்யாப்பிள்ளை மகன் அருணாச்சலம் (வயது 25) ஆகியோரால் அரிவாளால் வெட்டி தாக்கப்பட்டனர்.

இறந்தவர்கள் விபரம் :

இதில் முத்துப்பேச்சி என்பவர் சம்பவ இடத்தில் இறந்து விட்டார். அருண் மகேஷ் என்பவர் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

தனிப்படை அமைப்பு : இக்கொலை சம்மந்தமாக ஏரல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இவ்வழக்கின் எதிரிகளை பிடிப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பாரத் அவர்கள் தலைமையில் ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் திரு. ஜோசப் ஜெட்சன், ஆழ்வார்திருநகரி காவல் ஆய்வாளர் திரு. ஜீன் குமார் மற்றும் காவல் துறையினர் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

கொலைக்கான காரணம் :
சிவகளை பரம்பு கோவில் தெருவைச் சேர்ந்த லெட்சுமணன் மகன் விக்னேஷ் ராஜா (22) என்பவருக்கும், அவருடைய உறவினரான ஏரல் முதலியார் தெருவைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் முத்துராமலிங்கம் என்ற ராஜா (23) என்பவரது சகோதரி சங்கீதா ஆகியோர் கடந்த 18.06.2020 அன்று விக்னேஷ் ராஜா வீட்டார் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் விக்னேஷ் ராஜா, தனது மனைவி சங்கீதா மூலம் பெண் வீட்டாரிடம் வரதட்சனை கேட்டு தொந்தரவு செய்துள்ளதாகவும், அதனால் அவர்கள் இருவர் குடும்த்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அதன் விளைவாக, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கியதில் இந்த கொலை நடைபெற்றுள்ளது.

கொலை வழக்கு எதிரிகள் 3 பேர் விரைந்து கைது :

மேற்படி தனிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 3 எதிரிகளை விரைந்து கைது செய்துள்ளனர்.

3 எதிரிகளின் முழு விபரம் :
1) ஏரல் முதலியார் தெருவைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் முத்துராமலிங்கம் என்ற ராஜா (வயது 23),
2) ஏரல் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுந்தரம் மகன் முத்துச்சுடர் (வயது19)
3) ஏரல் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அய்யாப்பிள்ளை மகன் அருணாச்சலம் (வயது 25).

எதிரிகளை விரைந்து கைது செய்த தனிப்படையினரை தூத்துக்குடி மாவட்டட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.