தூத்துக்குடி மாவட்ட காவல்த்துறை அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 3701 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1740 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

கரோனா பரவலைத் தடுக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 13 எல்லைப் பகுதிகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தடை உத்தரவை மீறி சாலைகளில் இருசக்கர வாகனங்களில் அடிக்கடி சுற்றித்திரிவோரை போலீசார் கைது செய்து வருகின்றனர். பலமுறை எச்சரித்து தடை உத்தரவை பொருட்படுத்தாமல் சுற்றித் திரிந்ததாக நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் 188 நபர்களை போலீசார் கைது செய்து, 2 கார்கள் உட்பட 111 வாகனங்கள் பறிமுதல் செய்தனர். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 3163 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3701 பேர் கைது செய்யப்பட்டுள்ளர். மேலும் அவர்கள் பயன்படுத்திய 1740 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.