தூத்துக்குடி மாவட்ட காவல்த்துறை அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் தடை உத்தரவை மீறி சுற்றித் திரிந்ததாக இதுவரை 3299 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 1506 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 13 எல்லைப் பகுதிகளும் மூடப்பட்டுள்ளன. இதேபோல, தூத்துக்குடி மாநகரப் பகுதியில் உள்ள ஒருசில பிரதான சாலைகளைத் தவிர மற்ற சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன. தடை உத்தரவை மீறி சாலைகளில் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிவோரைக் கட்டுப்படுத்த தூத்துக்குடி குரூஸ்பா்னாந்து சிக்னல், வி.வி.டி. சாலை, தென்பாகம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் காவல் துறையினா் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இருசக்கர வாகனத்தில் வருபவர்களை போலீசார் முகக் கவசம் அணியுமாறும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தினா். இந்நிலையில் பலமுறை எச்சரித்து தடை உத்தரவை பொருள்படுத்தாமல் சுற்றித் திரிந்ததாக நேற்று 109 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 121பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 39 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், மாவட்டம் முழுவதும் இதுவரை 2797 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3299 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 1506 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது