தூத்துக்குடி மாவட்டத்தில் 09.04.2020 அன்று 144 தடை உத்தரவை மீறிய 141 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டுக்கு ஒருவர் பொது இடங்களில் வரும்போது முக கவசம் அணியுமாறும், சமூக விலகலை கடைபிடிக்குமாறும் காவல்துறையினர் பலமுறை கூறிவரும் நிலையில் 09.04.2020 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை பொருட்படுத்தாமல் சாலையில் அலட்சியமாக சுற்றித்திரிந்த 141 நபர்களை வழக்குப் பதிவு செய்து கைது செய்து, 67 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 1260 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1483 பேர் கைது செய்யப்பட்டு, 841 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
