வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் உதவி

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஒன்றினைவோம் வா திட்டத்தில் கொரோனா உதவி கேட்டு மறுக்கப்பட்ட, வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் உதவி.

தி.மு.க. தலைமை ஒன்றினைவோம் வா என்ற திட்டத்தை அறிவித்து செல், போன் நம்பர்களை வழங்கியது. இந்த அழைப்பில் பேசினால் டேப் செய்யப்பட்ட ஸ்டாலின் பேச்சு ஒலிபரப்பபடும். உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு அந்தெந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு தெரிவித்து உங்கள் கோரிக்கை ஏற்கப்படும் என தெரிவிக்கப்படும். இந்த ஸ்டாலின் டேப் பேச்சு ஏமாற்று வேலை உணர்ந்த தூத்துக்குடி மக்கள் கொரோனா உதவி கேட்டு வீட்டு வேலை செய்யும் பெண்கள் தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சத்யா இலட்சுமணனை அனுகினர்.
வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு 5 கிலோ அரிசி, காய்கறி பை சேர்த்து வழங்க ஏற்பாடு செய்தார். விழாவிற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இனண செயலாளர் சத்யா இலட்சுமணன் தலைமை தாங்கினார். வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு நிவாரண பொருட்கள் பையை தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் வக்கீல் செங்குட்டுபவன் வழங்கினார். பி.சி.மணி, கே.மிக்கேல், சா.சோமு, கே, சேரந் தையன், பரமசிவன், பொன்னம்பலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.